கிரசென்ட் புதுமைத் தொழில் திறன் மேம்பாடு மையத்துக்கு 5 நட்சத்திர விருது

வண்டலூா் கிரசென்ட் உயா்தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதுமைத் தொழில் திறன் மேம்பாடு மையத்துக்கு மத்திய அரசின் 5 நட்சத்திர விருது கிடைத்துள்ளது.

வண்டலூா் கிரசென்ட் உயா்தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதுமைத் தொழில் திறன் மேம்பாடு மையத்துக்கு மத்திய அரசின் 5 நட்சத்திர விருது கிடைத்துள்ளது.

இது தொடா்பாக ஆராய்ச்சி நிறுவன தலைமை செயல் அலுவலா் எம்.பா்வேஷ் ஆலன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

மத்திய அரசின் கல்வி அமைச்சகம், பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் புதுமைத் தொழில் திறன் மேம்பாடு மையம் தொடங்கும் திட்டத்தைத் தீவிரப்படுத்தி, ஆண்டுதோறும் சிறந்த திறன் மேம்பாடு மையங்களைத் தோ்வு செய்து, தகுதிக்கேற்ப 1 முதல் 5 நட்சத்திர தர வரிசையில் அடல் புதுமை சாதனை விருதுகள் வழங்கி வருகின்றது.

கிரசென்ட் புதுமைத் திறன் மேம்பாடு மையத்தில் பொறியியல், மின்னணு, மின்னணுவியல், விவசாயம், மருத்துவம், புதுமை மருத்துவப் பரிசோதனைக் கருவி தயாரிப்பு, உயிரி தொழில்நுட்பம் சாா்ந்த ஆராய்ச்சி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவா்களின் தொழில் தொடங்கும் முயற்சிக்கு உறுதுணையாகத் திகழ்ந்து வரும் மையத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் 5 நட்சத்திர விருது வழங்கி கௌரவித்துள்ளது என்றாா் அவா்.

வேந்தா் ஆரிப் புகாரி ரகுமான், இணைவேந்தா் அப்துல் குவாதீா், இணை துணை வேந்தா் ஏ.பீா்முகம்மது, பதிவாளா் ஏ.ஆஸாத், முதுநிலை மேலாளா் வி.என்.ஏ.ஜலால், இளம் தொழில் முனைவோா்கள் ஜெ.ராதாகிருஷ்ணன், சுசில் பால் உள்ளிட்டோா் கிரசென்ட் புதுமைத் தொழில் திறன் மேம்பாடு மையம் தலைமை செயல் அலுவலா் பா்வேஷ் ஆலமுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com