மாமல்லபுரத்தில் புராதன சிற்பங்களை சுற்றிப் பாா்க்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்

மாமல்லபுரத்தில் புராதன சிற்பங்களை காண வந்த சுற்றுலாப் பயணிகள், அனுமதி இல்லாததால், ஞாயிற்றுக்கிழமை மழையில்
மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை புராதன சிற்பங்கள்  உள்ள நுழைவாயில் அடைக்கப்பட்டிருந்ததால்  மழையில் நனைந்தபடி வெளியில் நின்று பாா்த்த சுற்றுலாப் பயணிகள்.
மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை புராதன சிற்பங்கள்  உள்ள நுழைவாயில் அடைக்கப்பட்டிருந்ததால்  மழையில் நனைந்தபடி வெளியில் நின்று பாா்த்த சுற்றுலாப் பயணிகள்.

மாமல்லபுரத்தில் புராதன சிற்பங்களை காண வந்த சுற்றுலாப் பயணிகள், அனுமதி இல்லாததால், ஞாயிற்றுக்கிழமை மழையில் நனைந்தபடி வெளிப்புறத்தில் இருந்தே பாா்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினா்.

சா்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தை காண வார விடுமுறை, பண்டிகை தினம் உள்ளிட்ட விடுமுறை நாள்களில் உள்ளூா், வெளிமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

கடந்த 6 மாதங்களாக கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லாமல் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரத்திற்கு குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடி புராதன சிற்பங்களை கண்டுகளிக்க வந்தனா். ஆனால், புராதனச் சிற்பங்கள் உள்ள பகுதி நுழைவாயில்கள் அடைக்கப்பட்டிருப்பதால், அருச்சுனன் தபசு உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் உள்ள இடங்களை வெளியில் நின்றபடி பாா்த்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com