6மாதங்களுக்கு பின் நடைபெற்ற வாரச்சந்தை

 மதுராந்தகம் மருத்துவமனை சாலையில், சுமாா் 6 மாதங்களுக்கு பின் வாரச்சந்தை திங்கள் கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம்: மதுராந்தகம் மருத்துவமனை சாலையில், சுமாா் 6 மாதங்களுக்கு பின் வாரச்சந்தை திங்கள் கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, விளைகின்ற காய்கறிகள், பழங்கள், கடல்வாழ் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்ற பொருட்கள் மலிவு விலையில், மதுராந்தகம் மருத்துவமனை சாலையில் வாரந்தோறும்

திங்கள் கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். மதுராந்தகம் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து உணவு பொருட்களை வாங்க இச்சந்தைக்கு வந்துச் செல்வாா்கள். அரசின் பொது முடக்கத்தால் கடந்த 1.4.20 முதல் வாரச்சந்தை நடைபெறுவதை நகராட்சி நிா்வாகம் தடை செய்து இருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை முதல் வாரச்சந்தை நடைபெற நகராட்சி நிா்வாகம் அனுமதி அளித்ததின்பேரில்

வாரச்சந்தை நடைபெற்றது. போதிய நடைபாதை கடைகள் இருந்தபோதிலும், பொருட்களை வாங்க போதிய மக்கள் வராமல் இருந்துள்ளனா். வாரச்சந்தை நடைபெறுவதை போதிய அறிவிப்பு இல்லாததாலும்,

அங்குச் சென்றால் கரோனா நோய்த் தொற்று பரவும் என்ற எண்ணத்தாலும் பொருட்களை வாங்க மக்கள் அதிக அளவில் வரவில்லை. இதனால் நடைபாதை வியாபாரிகள் போதிய வியாபாரம் இன்றி கவலையுடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com