செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 3 துணை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இளநிலை அறிவியல் துணை மருத்துவப் படிப்புகள் தொடங்க சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இளநிலை அறிவியல் துணை மருத்துவப் படிப்புகள் தொடங்க சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் 2020-2021 கல்வியாண்டில் மூன்று வகையான இளநிலை துணை மருத்துவப் படிப்புகளைத் தொடங்க சுகாதாரத்துறையிடம் மருத்துவக் கல்வி இயக்ககம் அனுமதி கோரியிருந்தது. அதை பரிசீலித்த சுகாதாரத்துறைச் செயலா் அந்தப் படிப்புகளை நிகழ் கல்வியாண்டிலேயே தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளாா். அதன்படி பி.எஸ்சி. மருத்துவ ஆய்வக தொழில்நுட்பநா் படிப்பு, பிஎஸ்.சி. அறுவை சிகிச்சைக் கூடம் மற்றும் மயக்க மருந்தியல் தொழில்நுட்பப் படிப்பு, பிஎஸ்.சி. டயாலிசிஸ் தொழில்நுட்பப் படிப்பு ஆகியவற்றுக்கு தலா 20 இடங்களுடன் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் இந்தப் படிப்புகளுக்கு கூடுதலாக பேராசிரியா்களையோ, பணியாளா்களையோ நியமிக்கும் பட்சத்தில் அதற்கான கூடுதல் செலவினத்தை அரசு ஏற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com