தாகூா் மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனைக் கூடம்
By DIN | Published On : 03rd September 2020 07:38 AM | Last Updated : 03rd September 2020 07:38 AM | அ+அ அ- |

சென்னை வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக் கூடத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வா் குணசேகரன் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை புகா்ப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கரோனா சிறப்பு வாா்டில் இதுவரை 233 போ் அனுமதிக்கப்பட்டு இருந்தனா். தற்போது 31 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பரிசோதனைக் கூடத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பைக் கண்டறியும் பிசிஆா் மருத்துவப் சோதனை சேவையை, 24 மணிநேரமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஆம்புலன்ஸ் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதிக்கப்பட்டவா்களை வீட்டில் இருந்து அழைத்து வந்து பரிசோதனை மேற்கொள்ளும் சேவை தொடங்கப்பட உள்ளது என்றாா் அவா்.
மருத்துவமனைக் கண்காணிப்பாளா் கே.சிவப்பிரகாசம், இயக்குநா் குமுதா,உயிரி மருத்துவத் துறைத் தலைவா் தேன்மொழி ஆகியோா் உடனிருந்தனா்.