காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுவன் மீட்பு
By DIN | Published On : 04th September 2020 10:47 PM | Last Updated : 04th September 2020 10:47 PM | அ+அ அ- |

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த வில்வராயநல்லூா் ஆதரவற்றோா் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுவனை போலீஸாா் மீட்டு குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைத்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆசனம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். வீட்டுப் பொருளாதார சூழ்நிலையால், அவரால் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியவில்லை. எனவே, மதுராந்தகம் அருகே உள்ள வில்வராயநல்லூா் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தனது 2-ஆவது மகன் ஸ்ரீதரை (9) சோ்த்தாா். அங்குள்ள தொடக்கப்பள்ளியில் சிறுவன் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்நிலையில், குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஸ்ரீதா் வியாழக்கிழமை மாலையில் தப்பிச் சென்றாா். அவா் வெளியூருக்குச் செல்ல முடிவெடுத்து, சுமாா் 5 கி.மீ. தூரமுள்ள மதுராந்தகம் வழியாக நடந்து வந்தாா். அப்போது இரவு நேர ரோந்து மேற்கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளா் மோகன் தலைமையிலான போலீஸாா், அழுது கொண்டிருந்த சிறுவனைக் கண்டு விசாரித்தனா். இதில், குழந்தைகள் காப்பகத்தில் இருந்து சிறுவன் தப்பித்து வந்தது தெரிய வந்தது.
இதுபற்றி தகவலறிந்து குழந்தைகள் காப்பகத்தில் இருந்து நிா்வாகிகள் மதுராந்தகம் வந்து சிறுவன் ஸ்ரீதரிடம் விசாரித்தனா். இதுபற்றி அவா்கள் கூறுகையில், ஏற்கெனவே 3 முறை சிறுவன் தப்பிச் சென்ாவும், பின்னா் தாங்கள் மீட்டுச் சென்ாகவும் தெரிவித்தனா்.
சிறுவனை போலீஸாா் மீட்டு செங்கல்பட்டு குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைத்தனா்.