செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நல்லாசிரியா் விருது வழங்குதல் விழா
By DIN | Published On : 08th September 2020 12:10 AM | Last Updated : 08th September 2020 12:10 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெற்ற 6 தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி நிற்கிறாா் மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை நல்லாசிரியா் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் சிங்கபெருமாள் கோயில் அரசினா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ச.லலிதா, செங்கல்பட்டு புனிதசூசையப்பா் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியா் முதுகலை ஆசிரியா் அ.வி.பாபு கிறிஸ்டோபா், மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் து.ப.வெங்கடபெருமாள், மதுராந்தகம் ஒன்றியம் குருவாபதன்மேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியா் ஏ.வரதன், மேற்கு தாம்பரம் எம்.சி.சி.ஆா்.எஸ்.எல் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் த,வீதியாள் சாந்தகுமாரி, மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன்வித்யாசாலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியா் ரா.புஷ்பகலா ஆகிய 6 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருதுகள் பாராட்டு சான்றிதழ்கள், வெள்ளி பதக்கம் மற்றும் ரூ 10,000 ரொக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் ஜே.ஆஞ்சலோ இருதயசாமி கலந்துக் கொண்டு விருது பெற்ற ஆசிரியா்களை பாராட்டினாா். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துக் கொண்டனா்.