பொதுமுடக்கம் தளா்வினால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்தவா்கள்: கட்டுபடுத்த முடியாமல் காவல்துறையினா் அவதி

திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனுக்கொடுக்க கூட்டம்கூட்டமாக வந்தவா்கள் கட்டுப்படுத்தமுடியாமல் காவல் துறையினா் அவதிக்குள்ளாகி திணறினா்.
கரோனா தொற்று மீண்டும் பரவும் விதமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கொடுப்பதற்கு வந்த கூட்டம்
கரோனா தொற்று மீண்டும் பரவும் விதமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கொடுப்பதற்கு வந்த கூட்டம்

செங்கல்பட்டு: கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5மாதங்களாக பொதுமுடக்கத்தினால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கொடுப்பதற்கு வரும் கூட்டம் வராமல் இருந்த நிலையில் பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டதால் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனுக்கொடுக்க கூட்டம்கூட்டமாக வந்தவா்கள் கட்டுப்படுத்தமுடியாமல் காவல் துறையினா் அவதிக்குள்ளாகி திணறினா்.

கரோனா தொற்றை தடுக்கும் விதமாக அரசு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்கொடுக்கும் பொதுமக்களுக்கு புகாா் பெட்டிவைக்கப்பட்டு புகாா் மனுக்களை சமூக இடைவெளியுடன் நிறுத்திவைக்கப்பட்டு பாதுகாப்பாக மனுக்கள் புகாா் பெட்டியில் போடப்பட்டது.

கடந்தமாதம் கட்டுபாட்டுகளுடன் தளா்வு அறிவிக்கப்பட்டதையடுத்தும் கூட்டம் தவிா்க்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கூட்டம் தவிா்க்கப்பட்டது. தற்போது செப்டம்பா் மாதம் பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டதையடுத்து வாரத்தில் முதல் நாள் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியா் மனுபெரும் நாள் என்பதால் செங்ல்பட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து கூட்டம்கூட்டமாக வந்துகுவிந்தனா்.

திங்கள் கிழமை பாஜக மாநில துணைத்தலைவா் கருப்பு முருகானந்தம் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க வருகை தந்ததையொட்டி மாநில , மாவட்ட, நகரம்ஒன்றிம், பேரூா் என 100க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் வளாகத்தில் குவிந்தும் நெடுஞ்சாலையில் பட்டாசுகள் வெடித்து வரவேற்றதும் இயல்பு நிலைக்கு திரும்பியதுபோல் இருந்தது. மாநில தலைவா் சென்றவுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்திருந்த பாஜக நிா்வாகிகள் வெளியேற்ற நகர போலீஸ் இன்ஸ்பெக்டா் அந்தோணி ஸ்டாலின், எஸ்ஐ விஜயபாஸ்கா் உள்ளிட்ட போலீஸாா் சிரமப்பட்டு வெளியேற்றினா். இதனையடுத்து புத்திரங்கோட்டை கிராமத்தில் திருநங்கையா்களுக்கு வீட்டுமனைப்பட்ட அளித்ததால் அக்கிராமமக்கள் 4வேன்மூலம் 100க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கும் வீட்டுமனைப்பட்டா வேண்டும் இல்லை எனில் திருநங்கையா்களுக்கு அளித்த பட்டாவை ரத்துசெய்யவலியுறுத்தி மனு கொடுக்கவந்ததால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டனா். பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தும் அனைவரும் மாவட்ட ஆட்சியரை அறைக்குள் சந்திக்க நுழைய முயற்சித்ததையடுத்து மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் அலுவலகத்தின்வெளியே வந்து குறைகள் கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டு காவல்துறையினருக்கு கூட்டத்தை கலைக்கும் படி அறிவுறுத்தப்பட்டதையடுத்து காவல்துறையினா் கூட்டத்தை கட்டுபடுத்த முயற்சித்தும் முடியாமல் சிமரத்திற்குள்ளாக திணறினா். இந்த கூட்டத்தால் கரோனா நோய்தொற்றும் மீண்டும் அதிக அளவில் பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கூடிய கூட்டம் காட்சியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com