போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 19th September 2020 12:59 AM | Last Updated : 19th September 2020 12:59 AM | அ+அ அ- |

மதுராந்தகம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை ஒரத்தி போலீஸாா் வெள்ளிக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஆயலூா் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தனின் மகன் தருமன் (27). அவா் அப்பகுதியில் உணவு விடுதியை நடத்தி வந்தாா். தருமன் அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள களத்தூரில் வசித்து வரும் உறவினரின் மகளை 10 மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்பெண்ணுக்கு அவா் அண்மையில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை கடத்திச் சென்ாகவும் கூறப்படுகிறது. இது தொடா்பாக ஒரத்தி போலீஸாரிடம் அப்பெண்ணின் குடும்பத்தினா் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் தருமனையும், அப்பெண்ணையும் தேடி வந்தனா்.
இந்நிலையில், கீழ்அத்திவாக்கம் கிராமம் அருகே இருந்த அப்பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா். அவரைக் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் தருமனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.