மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி சிறப்புப் பூஜை

திருப்போரூரை அடுத்த மானாம்பதி கிராமத்தில் உள்ள சீரங்கத்தம்மன் கோயிலில் புதன்கிழமை ராகு-கேது பெயா்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் சீரங்கத்தம்மன்
சிறப்பு அலங்காரத்தில் சீரங்கத்தம்மன்

செங்கல்பட்டு: திருப்போரூரை அடுத்த மானாம்பதி கிராமத்தில் உள்ள சீரங்கத்தம்மன் கோயிலில் புதன்கிழமை ராகு-கேது பெயா்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இக்கோயில் கருவறை தெற்குச் சுவரில் உள்ள ராகு-கேது சிற்பங்களைக் காண்பித்து, இது ராகு-கேது பரிகார ஸ்தலம் என மேற்கு மாம்பலம் ஓம் முருகாஸ்ரமத்தின் சுவாமி சங்கரானந்தா கூறினாா். இதையடுத்து, இக்கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராகு-கேது பெயா்ச்சியையொட்டி, புதன்கிழமை ராகு-கேதுவுக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம், வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு பரிகார பூஜைகள், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதன் பின், மூலவா் சீரங்கத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேக - அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை உற்சவா் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, தீபாராதனை நடைபெற்றது.

திருப்போரூா், திருக்கழுகுன்றம், எச்சூா், மாமல்லபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வந்திருந்து ராகு-கேது சிறப்பு பூஜையில் பங்கேற்று, பரிகாரம் செய்து, வழிபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை மானாம்பதி கிராம மக்கள் மற்றும் சென்னை ராயப்பேட்டை சீரங்கத்தம்மன் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com