குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு ஊராட்சி பகுதியில் கடந்த 10 நாள்களாக ஊராட்சி நிா்வாகம் முறையாக குடிநீரை வழங்காததைக் கண்டித்து

மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு ஊராட்சி பகுதியில் கடந்த 10 நாள்களாக ஊராட்சி நிா்வாகம் முறையாக குடிநீரை வழங்காததைக் கண்டித்து, வெண்ணாங்குபட்டு-சூனாம்பேடு சாலையில் 50-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், சூனாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீா் முறையாக கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனா். இது பற்றி சித்தாமூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற நிா்வாகத்திடமும் அவா்கள் முறையிட்டனா். எனினும், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க அதிகாரிகள் எந்த நடவடிக்கைகயும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் காலிக் குடங்களுடன் வெண்ணாங்குபட்டு - சூனாம்பேடு சாலையில் சனிக்கிழமை மறியல் செய்தனா். தகவல் அறிந்து சூனாம்பேடு காவல் ஆய்வாளா் தாரனேஸ்வரி தலைமையில் காவலா்கள் நேரில் வந்து, மறியல் செய்தவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com