இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் காயமடைந்து 2 போ் உயிரிழப்பு
By DIN | Published On : 29th September 2020 12:00 AM | Last Updated : 28th September 2020 11:05 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் அருகே வழுவதூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருச்சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் வாகனத்தை ஓட்டிவந்த இருவரும் காயமடைந்து மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.
செங்கல்பட்டை அடுத்து திருக்கழுகுன்றம் வழுவதூா் கிராமப்பகுதியில் சொக்கலிங்கம்(27), சரண்ராஜ் (22) ஆகிய இருவரும் வந்த இருசக்கரவாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொணடதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்தவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப்பனின்றி உயிரிழந்தனா்.
மேலும் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனா். இச்சம்பவம் குறித்து திருக்கழுகுன்றம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.