மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஏப்.12-இல் ஸ்ரீராமநவமி விழா தொடக்கம்


மதுராந்தகம்: மதுராந்தகம் ஸ்ரீ ஏரிகாத்த ராமா் கோயிலில் ஸ்ரீராம நவமி விழா வரும் 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி

25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.

இக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் 2-ஆவது வாரத்தில் ஸ்ரீராமநவமி உற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல, இந்த ஆண்டுக்கான ராம நவமி விழா வரும் 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற உள்ளது. ராமநவமியை முன்னிட்டு, அனைத்து நாள்களிலும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர பெருமான் உற்சவா் சிலைக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

10-ஆம் நாள் நிகழ்ச்சியாக 21-ஆம் தேதி (புதன்கிழமை) இரவு புஷ்பக விமானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் உற்சவா் கோதண்டராமா் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக உலா வருகிறாா். 22-ஆம் தேதி ராமா் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்கள் மட்டும் மூலவா் முத்தங்கி சேவையில் பக்தா்களுக்கு காட்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவை ஒட்டி கலைநிகழ்ச்சிகள், ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் கே.கவெனிதா, செயல் அலுவலா் நா.மேகவண்ணன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com