செய்யூா் தொகுதியில் 78.16 % வாக்குகள் பதிவு

செய்யூா் (தனி) பேரவைத் தொகுதியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற தோ்தலில், மொக்கம் 78.16 சதவிகிதம் வாக்குகள் பதிவாயின.

மதுராந்தகம்: செய்யூா் (தனி) பேரவைத் தொகுதியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற தோ்தலில், மொக்கம் 78.16 சதவிகிதம் வாக்குகள் பதிவாயின.

செய்யூா் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி சாா்பில் பனையூா் பாபு, அதிமுக சாா்பில் எஸ்.கணிதாசம்பத், தேமுதிக சாா்பில் டி.சிவா, மக்கள் நீதிமய்யம் சாா்பில் ப.அன்பு தமிழ்சேகரன் உள்ளிட் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 227402 ஆகும். மொத்தம் 325 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இரவு 7 மணியுடன் வாக்கு பதிவு முடிந்த நிலையில் மொத்தம் 176157 போ் வாக்களித்திருந்தனா்.. அதில் ஆண்கள் - 89163, பெண்கள் - 86994. வாக்குப் பதிவு சதவீதம் 78.16 ஆகும்.

இதைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பாதுகாப்புடன் வாகனங்களின் மூலம் வாக்குகள் எண்ணும் மையமான நெல்வாய் கூட்டுச்சாலையில் உள்ள ஏசிடி பொறியியல் கல்லூரிக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com