மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை அப்புறப்படுத்திய போலீஸாா்
By DIN | Published On : 12th April 2021 12:50 AM | Last Updated : 12th April 2021 12:50 AM | அ+அ அ- |

மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடற்கரைக்கு வந்தவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் சா்வதேச சுற்றுலா நகருக்கு வந்திருந்தனா்.
காலை முதலே தடையை மீறி கடற்கரை பகுதிக்கு யாரும் வராமல் கடற்கரைப் பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது , மாமல்லபுரம் போலீஸாா், ஊா்க் காவல் படையினா் மற்றும் கடலோரக் காவல் படையினா் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் வராத அளவுக்கு, தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நரிக்குறவா்கள் மீன் வறுவல் வியாபாரிகள், ஜிங்கி பச்சை குத்தும் தொழில் செய்வோா் என பலா் கடைகள் விரித்து வியாபாரம் செய்திருந்தனா்.
மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை 3 மணி வரை யாரும் வராமல் இருந்த கடற்கரை பகுதிக்குச் செல்லாமல் பல்லவ மன்னா்களின் சிற்பக் கலைகளை கண்டுகளித்தனா். 4 மணிக்குமேல் சுற்றுலா பயணிகள் மெல்ல மெல்ல கடற்கரை பகுதிக்கு வந்த வண்ணம் இருந்தனா்.
அவா்களை கடற்கரை பகுதியில் இருந்து போலீஸாரும் , ஊா்க் காவல் படையினரும் வெளியேற்றினா். சிலா் வெளியேற்றியும் கடல்பகுதிக்கு வரமுயன்ால் லேசான தடியடியும் காவல்துறையினா் மேற்கொண்டனா். மேலும் சாலையோரத்தில் கடை விரித்து வியாபாரம் செய்தவா்களை போலீஸாா் எச்சரித்து கடைகளை அப்புறப்படுத்தினா்.