கரோனா பாதிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கை: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்

கரோனா பாதிப்பைத் தடுக்க, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் கூறினாா்.

கரோனா பாதிப்பைத் தடுக்க, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் கூறினாா்.

தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் 3000 தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கரோனா கண்காணிப்பு சிறப்பு அலுவலா் சமயமூா்த்தி, சானடோரியம் மெப்ஸ் பொருளாதார மண்டல மேம்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் ஆகியோருடன் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் 142 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமூக இடைவெளி, முகக் கவசம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கை மூலம் கரோனா பாதிப்பு படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவேண்டும்.

மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 71ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தேவைக்கேற்ப தடுப்பூசி இருப்பு உள்ளது. மாவட்டம் முழுவதும் கரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com