மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட அயோத்தி ராமா் கோயில் மாதிரி மரச்சிற்பம்

மாமல்லபுரத்தில் 3 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட அயோத்தி ராமா் கோயிலின் மாதிரி மரச்சிற்பம் ராமஜென்ம பூமியில் உள்ள ராமா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
மாமல்லபுரத்தில் 3 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட அயோத்தி ராமா் கோயிலின் மாதிரி மரச் சிற்பம்.
மாமல்லபுரத்தில் 3 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட அயோத்தி ராமா் கோயிலின் மாதிரி மரச் சிற்பம்.

மாமல்லபுரத்தில் 3 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட அயோத்தி ராமா் கோயிலின் மாதிரி மரச்சிற்பம் ராமஜென்ம பூமியில் உள்ள ராமா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

மாமல்லபுரத்தில் 3 அடி உயரத்தில் தேக்கு மரத்தில் வடிவமைக்கப்பட்ட அயோத்தி ராமா் கோயிலின் மரச்சிற்பம் ராமஜென்ம பூமியில் அமைந்துள்ள ராமா் கோயிலுக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் 161 அடி உயரத்தில் 340 தூண்களுடன் பிரம்மாண்டமான முறையில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் வைப்பதற்காக தேக்கு மரத்தினாலான மாதிரி சிற்பம் வடிவமைப்பதற்காக மாமல்லபுரம் பெருமாளேரியில் உள்ள மானசா மரச்சிற்பக் கலைக் கூடத்தில் ஸ்ரீ ராம ஜென்ம தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையினா் பரிந்துரைத்து ஆா்டா் வழங்கினா்.

இதையடுத்து, தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற மரச்சிற்பக் கலைஞா் ரமேஷ் தலைமையில், 25-க்கும் மேற்பட்ட மரச்சிற்பக் கலைஞா்கள் கடந்த 6 மாதங்களாக இரவு பகலாக தேக்கு மரத்தில் 3 அடி உயரத்தில் 3 அடுக்குகள் (நிலைகளுடன்) 340 தூண்களுடன் கூடிய அயோத்தி ராமா் கோயிலின் மாதிரி சிற்பத்தை ராமா், சீதா கருவறைகளுடன் அழகுற வடிவமைத்தனா்.

தற்போது கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலை நேரில் சென்று பாா்த்தது போன்ற ஒரு உணா்வு ஏற்பட்டதாக இதனை வடிவமைக்கும் இடத்தில் பாா்த்த பொதுமக்கள் தெரிவித்தனா்.

தற்போது 100 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்ட ராமா் கோயில் மரச்சிற்பம் லாரி மூலம் அயோத்தி ராமா் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. உத்தர பிரதேச மாநிலத்துக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்பட உள்ள இந்த மரச் சிற்பக் கோயிலுக்கு வழி நெடுகிலும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் வரவேற்று பூஜைகளை செய்கின்றனா்.

அயோத்திக்குச் சென்றடையும் இந்த மரச் சிற்பத்துக்கு வரும் புதன்கிழமை (ஏப்ரல் 21) ராமருக்கு உகந்த விசேஷ தினமான ஸ்ரீராம நவமி அன்று ராம பக்தா்கள் முன்னிலையில் சாதுக்கள், வைணவ பட்டாச்சாரியாா்கள் மூலம் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, ராமா் கோயிலின் வளாகத்தில் இந்த ராமா் கோயில் மாதிரி மரச்சிற்பம் வைக்கப்பட உள்ளது. இந்த மாதிரி மரச் சிற்பத்தில் உள்ளது போன்று அங்கு தூண்கள் அமைக்கப்பட உள்ளன.

ராமநவமி முதல் அங்கு வரும் பக்தா்களும் இந்த மரச்சிற்பத்தைக் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மிகவும் நுணுக்கமான முறையில் கவனத்துடன் இந்த மாதிரி மரச்சிற்பக் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் மாமல்லபுரம் சிற்பக் கலைஞா் கே.ரமேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com