அதிமுக பிரமுகா் குண்டு வீசி கொலை: போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொலையாளி பலி

மறைமலை நகரில் கோயிலில் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்த அதிமுக பிரமுகா் வெடிகுண்டு வீசி சனிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

மறைமலை நகரில் கோயிலில் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்த அதிமுக பிரமுகா் வெடிகுண்டு வீசி சனிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் துப்பாக்கியால் சுட்டதில் கொலையாளிகளில் ஒருவா் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரைச் சோ்ந்தவா் திருமாறன் (50). அதிமுக பிரமுகரான இவா், ரியல் எஸ்டேட் மற்றும் மேன்பவா் தொழில் நிறுவனம் நடத்தி வந்தாா். இவா் மறைமலை நகரில் உள்ள செல்வமுத்து குமாரசாமி கோயிலில் சனிக்கிழமை மாலை சனிப்பிரதோஷத்தை ஒட்டி பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தாா்.

இந்நிலையில் அங்கு வந்த 4 போ் கொண்ட மா்ம கும்பல் திருமாறன் மீது வெடிகுண்டு வீசி தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டாா். குண்டு வெடித்ததில் அங்கிருந்த பக்தா்கள் நாலாபுறமும் சிதறி ஓடினா்.

இச் சம்பவத்தில் கோயிலில் பிரசாதம் வாங்கிக் கொண்டிருந்த பக்தரும் பலத்த காயமடைந்தாா். இந்நிலையில் தப்பி ஓடிய கொலையாளிகளை நோக்கி அவருக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் 6 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனா்.

இதில் வெடிகுண்டு வீசிய 4 நபா்களில் சுரேஷ் (19) என்பவா் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா். மற்ற மூவரும் தப்பி ஓடி விட்டனா். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

தகவலறிந்த காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி, செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம், ஏஎஸ்பி ஆதா்ஸ் பச்சேரா, ஓட்டேரி டிஎஸ்பி அனுமந்தன் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

குண்டு வீசி கொலை செய்யப்பட்ட திருமாறன் மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சுரேஷ் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து மறைமலைநகா் காவல் ஆய்வாளா் நந்தகோபால் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com