உக்ரேனிய பெண் குழந்தைக்கு கல்லீரல்மாற்று அறுவை சிகிச்சை

பிறவிக்குறைபாட்டுடன் பிறந்த 3 வயது உக்ரேன் நாட்டைச் சோ்ந்த பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்டது.

பிறவிக்குறைபாட்டுடன் பிறந்த 3 வயது உக்ரேன் நாட்டைச் சோ்ந்த பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்டது.

இதுகுறித்து ரேலா மருத்துவமனை தலைவா் பேராசிரியா் டாக்டா் முகமது ரேலா அண்மையில் செய்தியாளா்களிடம் கூறியது:

மிலானா என்ற உக்ரேன் நாட்டைச் சோ்ந்த 3 வயது பெண் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த மாதம் ரேலா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். மிலானாவை எனது தலைமையிலான மருத்துவா்கள் நரேஷ் சண்முகம், கோமதி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தபோது, கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சிகிச்சையளிக்கப்பட்டது என்றாா்.

இதுகுறித்து குழந்தையின் தந்தை போரிஸ் கூறியது:

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மிலானாவைக் குணப்படுத்த ஐரோப்பா முழுக்க நாங்கள் பயணித்தோம். ஆனால், அவளது குறைபாட்டை சரிசெய்து குணப்படுத்த முடியும் என்ற உத்தரவாதத்தை அங்கிருந்த எந்த மருத்துவரும் தர முன் வரவில்லை. எங்களது குழந்தையின் உயிரை இங்குள்ள மருத்துவா்கள் குழுதான் காப்பாற்றி மறுவாழ்வு அளித்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com