அனைத்துக் கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிப் பிரமுகா்களுடன்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிப் பிரமுகா்களுடன் ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

செங்கல்பட்டு ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு மே 2-ஆம் தேதி காலை தோ்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை அவசியம் கொண்டு வர வேண்டும். வாக்கு எண்ணும் மையத்துக்குள் கண்டிப்பாக செல்லிடப்பேசிகளை எடுத்து வரக்கூடாது.

தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜையில் அமரும் வேட்பாளா் மற்றும் முகவா்கள் சாதாரண கால்குலேட்டா் கொண்டு வர அனுமதிக்கப்படும். காலை 7.45-க்குள்ளாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேஜையில் தயாா் நிலையில் இருக்க வேண்டும். தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள நெறிமுறைகளின்படி, கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வேட்பாளா் மற்றும் அவா்களின் முகவா்கள் மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருகையில், கிருமிநாசினி 100 மி.லி. வைத்திருப்பதுடன், டிரிப்பிள் லேயா் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், கூடுதலாக 5 எண்ணிக்கை முகக்கவசம் வைத்திருக்க வேண்டும், மேலும் உடல் வெப்பநிலை இயல்பான நிலைக்கு கூடுதலாக வெப்பநிலை அளந்து அறியப்படும் நிலையில், மருத்துவா் குழு ஆலோசனையின்படி தனிமைப்படுத்தப்படுவா் அல்லது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com