மணப்பாக்கம் கன்னிகோயில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு பிரசித்தி பெற்ற மணப்பாக்கம் கன்னிகோயிலில் ஆடிமாதம் முழுவதும் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

செங்கல்பட்டு பிரசித்தி பெற்ற மணப்பாக்கம் கன்னிகோயிலில் ஆடிமாதம் முழுவதும் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பொன்விளைந்த களத்தூர், நெ 1 மணப்பாக்கம் பிரசித்தி பெற்ற கன்னித் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாதத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குலதெய்வமாக அமைந்துள்ள கன்னியம்மன் சாமிக்கு பொங்கல் வைத்தும் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தியும்  சாமி தரிசனம் செய்வார்கள்.

ஆடிமாதம் தொடங்கி நாள் முதல் இன்று வரை இருசக்கர வாகனங்கள் கார், வேன் சிறப்பு சரக்கு வாகனம் என நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதாலும் தற்போது கரோனா தொற்று பரவும் அச்சம் உள்ளதால்ஆடி மாதம் முழுவதும் மேற்கண்ட திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும்  மற்றும் தொற்று பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com