செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை: அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்
By DIN | Published On : 22nd August 2021 01:25 AM | Last Updated : 22nd August 2021 01:25 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய்த்தொற்று நோயாளிகளுக்காக ரூ. 1.5 கோடி மதிப்பில் 1,000 எல்பிஎம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல்நாத் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆக்சிஜன் ஆலையைத் தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால், தினமும் 120 நோயாளிகள் பயன் அடைவா் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் ஆதாா்ஸ் பச்சேரா, முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, இதயவா்மன், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்துக்குமரன், நிலைய மருத்துவ அதிகாரி அனுசுயா, துணை மருத்துவக் கண்காணிப்பாளா் மோகன்குமாா் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.