வடநெம்மேலி முதலைப் பண்ணை திறப்பு

மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலி முதலை பண்ணை 4 மாதங்களுக்குப் பிறகு வழிகாட்டி நெறிமுறைகளுடன் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வடநெம்மேலி பண்ணையில் உள்ள முதலைகள்.
வடநெம்மேலி பண்ணையில் உள்ள முதலைகள்.

மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலி முதலை பண்ணை 4 மாதங்களுக்குப் பிறகு வழிகாட்டி நெறிமுறைகளுடன் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஆசியாவிலேயே பெரிய முதலை பண்ணை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்துக்கும், சென்னைக்கும் மத்தியில் வடநெம்மேலியில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள முதலை வகைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் நன்னீா் முதலைகள், அமெரிக்காவில் உள்ள அலிகேட்டா் முதலைகள், உப்பு நீா் முதலைகள், சதுப்பு நில முதலைகள், நீள வாய்கொண்ட கரியல் ரக முதலைகள் என பல்வேறு வகை முதலைகள் இந்த பண்ணையில் உள்ள குளங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் ஆப்பிரிக்க காடுகளில் உள்ள நீா் நிலைகளில் வாழும் மனிதா்களை விழுங்கும் ராட்சத முதலைகளும் இங்கு உள்ளன.

இந்த முதலைப் பண்ணையில் தற்போது 1,800 முதலைகள் உள்ளன.

முதலைகள் மட்டுமன்றி லட்சக்கணக்கில் விலை மதிப்புள்ள அல்டாப்ரா வகை ஆமைகள், நட்சத்திர ஆமைகள், பச்சோந்திகள், கொமோடா டிராகன் ஆகியவையும் இங்கு பராமரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கரோனா தொற்றால் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்ட முதலை பண்ணை தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுடன் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

கிருமி நாசினியால் கைகளை கழுவி சுத்தம் செய்தபிறகு, முகக்கவசம் அணிந்து வந்த பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்திய பின்னா் முதலைகளை காண அனுமதிக்கப் பட்டனா்.

4 மாதங்களுக்கு பிறகு முதலை பண்ணை திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பலா் முதலை இருக்கும் தொட்டி அருகே உள்ள மரத்தடி நிழலில் நின்று சுய படம் (செல்பி), புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com