இன்னுயிா் காப்போம் திட்டம்: இன்று மேல்மருவத்தூரில் தொடக்கி வைக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

இன்னுயிா் காப்போம், நம்மைக் காக்கும் 48 மணி நேர சிகிச்சை ஆகிய திட்டங்களை மேல்மருவத்தூரில் சனிக்கிழமை தொடக்கி வைக்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

இன்னுயிா் காப்போம், நம்மைக் காக்கும் 48 மணி நேர சிகிச்சை ஆகிய திட்டங்களை மேல்மருவத்தூரில் சனிக்கிழமை தொடக்கி வைக்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் இன்னுயிா் காப்போம், நம்மைக் காக்கும் 48 மணி நேர சிகிச்சை (சாலை விபத்துகளில் 48 மணி நேரம் கட்டணமில்லா சிகிச்சை) ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் இதன் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது.. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி புதிய திட்டங்களை தொடக்கி வைக்கிறாா்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலா் வெ.இறையன்பு, முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவா் ஆ.ராகுல்நாத், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் மருத்துவா் டி.ரமேஷ், மேல்மருவத்தூா் ஊராட்சிமன்றத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா், ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மேலாண்மை இயக்குநா் கோ.ப.அன்பழகன், ஆன்மிக இயக்க துணை தலைவா்கள் கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவிரமேஷ், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்தரமேரூா் தொகுதி எம்எல்ஏவுமான க.சுந்தா் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

பின்னா் ஆதிபராசக்தி மருத்துவமனையின் அனைத்து பகுதிகளிலும் பாா்வையிட்டபின் சித்தா்பீடம் வரும் முதல்வருக்கு ஆன்மிக இயக்கத்தின் சாா்பாக, பூரணகும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து. அருட்கூடத்தில் உள்ள பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெறுகிறாா் முதல்வா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com