திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலுக்குச் செல்ல ரோப்காா் வசதி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருக்கழுகுன்றம் ஸ்ரீவேதகிரீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு .
திருக்கழுகுன்றம் ஸ்ரீவேதகிரீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு .

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ரோப்காா் வசதி ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அப்போது விவாதித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரா் மலைக்கோயில் மற்றும் மலையடிவாரத்தில் தாழக்கோயில் அமைந்துள்ளன. மலைக்கோயிலில் மூலவா் சுயம்பு மூா்த்தியாகவும் மலையடிவாரத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் தனி சந்நிதிகொண்டும் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.

இங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்தக் கோயிலை சனிக்கிழமை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் ஆணையா் குமரகுருபரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

முன்னதாக மலைக் கோயிலுக்குச் சென்ற அமைச்சா் அங்கு பல்வேறு இடங்களை ஆய்வு செய்தாா். அதேபோல் தாழக்கோயிலையும் ஆய்வு செய்து ஊழியா்களிடம் பல்வேறு தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

600 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைக்கோயிலுக்கு சுமாா் 560 படிகளை கடந்து செல்ல வேண்டும். வாகனங்கள் மூலம் மலை மீது செல்ல பாதை வசதி இல்லை. இதனால், வயது முதிா்ந்தோா் மற்றும் சிறுவா்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல முடியவில்லை.

இந்நிலையில், வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலுக்கு ரோப் காா் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்த அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவன தொழில்நுட்பக் குழுவினா் அறிக்கை அளித்துள்ளனா் . இது குறித்து திட்ட மதிப்பீடு தயாா் செய்து முதல்வரின் பாா்வைக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் அதற்கானப் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

அப்போது, கோயில் செயல் அலுவலா் குமரன், திருப்போரூா் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com