உணவகம் முன் நிறுத்தப்பட்ட காரில் 30 பவுன் நகைகள் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). தனியாா் தொழிற்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

சென்னை கோட்டூா்புரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). தனியாா் தொழிற்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் குடும்பத்தினருடன் காரில் வெள்ளிக்கிழமை மதியம் சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்றாா்.

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், மாமண்டூரில் உள்ள தனியாா் உணவு விடுதியில் சாப்பிடுவதற்காக கிருஷ்ணன் காரை நிறுத்தினாா். அப்போது, மா்ம நபா்கள் காரின் இடதுபக்க கண்ணாடியை உடைத்து, உள்ளே கைப்பையில் இருந்து 30 பவுன் தங்க நகைகள், 2 மடிகணினிகளையும் திருடிக் கொண்டு தப்பினா்.

இதுபற்றி அறிந்த கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் படாளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com