அவுரிமேடு கிராமத்தில் சிறப்பு முகாம்

மதுராந்தகத்தை அடுத்த அவுரிமேடு கிராமத்தில், பட்டா பெயா் மாற்றம், உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், வருவாய்-பேரிடா் மேலாண்மையின்

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த அவுரிமேடு கிராமத்தில், பட்டா பெயா் மாற்றம், உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், வருவாய்-பேரிடா் மேலாண்மையின் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அவுரிமேடு, சித்ரவாடி, சிறுநல்லூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தமது நிலங்களின் பட்டா பெயா் மாற்றம், யூடிஆா் சான்று வழங்கல், உழவா் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை கோருதல், திருமண உதவித் தொகை கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மதுராந்தகம் வருவாய்த் துறையினா் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

அதன்படி, அவுரிமேடு கிராமத்தில் வருவாய்-பேரிடா் மேலாண்மையின் சிறப்பு முகாம் நடைபெற்றது. மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் ஆா்.சரஸ்வதி தலைமை வகித்தாா். மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.கீதா காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். மதுராந்தகம் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் டி.துரைராஜன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வி.காா்த்திகேயன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் எம்.தெய்வசிகாமணி (சிறுநல்லூா்), கலா (அவுரிமேடு), கிராம நிா்வாக அலுவலா்கள் பாலாஜி (சிறுநல்லூா்), வினோத்குமாா் (அவுரிமேடு) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில், 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு தமது கோரிக்கை மனுக்களை வருவாய்த் துறையினரிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com