தாழம்பூர் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குள்பட்ட தாழம்பூரில் உள்ள ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை   நடைபெற்றது.
தாழம்பூர் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குள்பட்ட தாழம்பூரில் உள்ள ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை   நடைபெற்றது.

தாழம்பூர் ஊராட்சியில் கிருஷ்ணாநகரில் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கல்வி கேள்வி ஞானத்தில் வெற்றிபெற ஞானசக்தி ஶ்ரீ ஞான சரஸ்வதிக்கும், மனோதைரியம் வெற்றி வீரத்தைத் தந்திட க்ரியா சக்தி ஶ்ரீமூகாம்பிகை தேவிக்கும், அஷ்டலட்சுமியோகமும், செல்வசெழிப்பும் பெற்றிட இச்சா சக்தி ஶ்ரீ லஷ்மி தேவிக்கும் ஒரே மண்டபத்தின் கீழ் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

பரிவார தெய்வங்களாக ஶ்ரீ பால கற்பக விநாயகர் , ஶ்ரீ பால முருகர், ஶ்ரீ சொர்ணகர்ஷண பாலசாஸ்தா, ஶ்ரீ காலபைரவர், ஶ்ரீ விஷ்ணுதுர்கை ஆகிய பரிவாரா தெய்வங்கள் அமைந்துள்ளன.  
இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆனதையடுத்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, கோவில் திருப்பணிகள் நடைபெற்றது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு பாலாலயம் நடைபெற்று ஆலய சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. 

அனைத்துப் பணிகளும் நிறைவுற்ற நிலையில் ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.  

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த திங்கள்கிழமை வேதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களைக் கொண்டு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் என 6 நாள்களும் அனைத்துப் பூஜைகளும் நடைபெற்றன.

திங்கள்கிழமை ஆறாம் கால யாகசாலை பூஜையும் ஜபம், ஹோமம், நாடி சந்தானம் மஹா பூர்ணாஹூதி மாக் தீபாராதனை மற்றும் கடம் புறப்பட்டு முதலில் ராஜகோபுர விமானம் பிறகு அம்மன் கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து விநாயகர் முதலான பரிவாரா மூர்த்திகளுக்கும் ஶ்ரீ த்ரிசக்தி தேவியர்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதில் இரண்டாயிரத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 02.02.2021 முதல் ஆலயத்தில் மண்டல அபிஷேகம் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகக் குழுவினர்களை ஒருங்கிணைத்து ஆலய ஸ்தாபகரும், திருத்தொண்டர், மாமணி ஆன்மீகச் செம்மல், உழைப்பால் உயர்ந்தவர், அரும்தொழில் மாமணி டாக்டர் கே.கே.கிருஷ்ணன்குட்டி செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com