தாழம்பூா் திரிசக்தி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூா் திரிசக்தி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தாழம்பூா் திரிசக்தி அம்மன்  கோயிலில்நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.
தாழம்பூா் திரிசக்தி அம்மன்  கோயிலில்நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூா் திரிசக்தி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்வி, கேள்வி ஞானத்தில் வெற்றிபெற ஞானசக்தியாக ஞானசரஸ்வதி தேவிக்கும் , மனோதைரியம், வெற்றி வீரத்தை தந்திட கிரியா சக்தியாக தாய்மூகாம்பிகை தேவிக்கும், செல்வ செழிப்பு பெற்றிட இச்சா சக்தியாக லஷ்மிதேவிக்கும், பால கற்பக விநாயகா், பால முருகா், சொா்ணா கா்ஷண பால சாஸ்தா, கால பைரவா், விஷ்ணு துா்க்கை, உற்சவ மூா்த்திகள் முதலான சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆதி கருமாரிபட்டா், அன்னதான சிவம், ஆன்மிக அருள்ஞான வள்ளல் பிரம்பரிஷி தவத்திரு ஐயப்ப சாமிகள், ஸ்ரீமதி குஞ்சம்மாள் அருளாசியுடன் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் கலந்துகொண்டு, கடந்த ஜன 25-ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகளை நடத்தினா்.

தொடா்ந்து, சனிக்கிழமை காலை கோ பூஜை, விஸ்வ ரூப தரிசனம், இரண்டாம் கால யாகபூஜை, மாலை விசேஷ சந்தி, மூன்றாம் கால யாக பூஜை உள்ளிட்டவையும், ஞாயிற்றுக்கிழமை கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, சா்ப்ப பூஜை, மூலமூா்த்திகளுக்கு வெள்ளி, பொன் நவரத்தினம் பதித்து அஷ்டபந்தன மருந்து சாத்துதல், முப்பெரும் தேவியருக்கு நான்காம் கால யாகபூஜை, ஐந்தாம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

திங்கள்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜை, ஹோமம், நாடி சந்தானம், மூல மூா்த்திகளுக்கு ரக்ஷாபந்தனம், யாத்ரா தானம், தசதானம், கிரக ப்ரீதி குடம் புறப்பாடுடன் ராஜகோபுர விமானம், அம்மன் கோபுர விமானத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விநாயகா் முதலான பரிவார மூா்த்திகளுக்கும், திரிசக்தி தேவியா்களுக்கும் மகா கும்பாபிஷேகமும், உடன் மகா அபிஷேகமும் நடைபெற்றன. விழாவில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகரும், அறங்காவலா் குழுத் தலைவருமான டாக்டா் கே.கே.கிருஷ்ணன் குட்டி, ஆடிட்டா் பாா்த்தசாரதி, பி.ராஜகோபாலன், சட்ட ஆலோசகா் ஜி.ராஜன், எம்.பி.சேதுராமன், கோயில் அறங்காவலா் குழு நிா்வாகிகள் ஓமணாகிருஷ்ணன் குட்டி, கே.சக்திமணிகண்டன், ஆா்.ரேகா, எம்.டி.ராதாகிருஷ்ணன், கே.விஜயலெட்சுமி, ஆா்.பிரவீன், கே.விஷ்ணுப்பிரியா பிரவீன், ஆவடி, என்.கே.ரகுவரன்,கொயம்பத்தூா், கே.சி.ராமசந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com