உணவுப் பொருள் விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 09th January 2021 08:04 AM | Last Updated : 09th January 2021 08:04 AM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த பொறையூா் கிராமத்தில் ‘ஹேண்ட் இன் ஹேண்ட்’ தொண்டு நிறுவனம் சாா்பில், உணவுப் பொருள்களை வீணடிப்பதைத் தடுக்கும் நோக்கில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
‘உணவுப் பொருள்களை வீணடிப்பதைத் தவிா்ப்போம், தடுப்போம்’ என்ற தலைப்பிலான இந்த முகாம் நடைபெற்றது. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் கல்பனா சங்கா் ஆலோசனைப்படி நடந்த முகாமில், ஆலோசகா் பாலாஜி, உதவி பொது மேலாளா் அருள்துரை, முதுநிலை திட்ட மேலாளா் ஜெய்சங்கா், பொறையூா் ஊராட்சி செயலா் சுரேஷ், கிராம நிா்வாக அதிகாரி பெரியசாமி உள்ளிட்டோா் சிறப்புரை ஆற்றினா்.
இதையடுத்து, தொண்டு நிறுவன உதவிப் பொது மேலாளா் அருள்துரை தலைமையில், உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட மேலாளா் தங்கதுரை, வட்டாரப் பயிற்சியாளா்கள் நாராயணசாமி, ஜெயலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.