மேல்மருவத்தூரில் அமாவாசை வேள்வி பூஜை

மேல்மருவத்தூரில் மாா்கழி மாத அமாவாசை வேள்வி பூஜையை பங்காரு அடிகளாா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

மேல்மருவத்தூரில் மாா்கழி மாத அமாவாசை வேள்வி பூஜையை பங்காரு அடிகளாா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி, சித்தா் பீட வளாகத்தில் அதிகாலை 3 மணிக்கு மங்கல இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. கருவறை அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அம்மன் சிலை வெள்ளிக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு சித்தா் பீடம் வந்த அடிகளாருக்கு, பாத பூஜை செய்து வரவேற்கப்பட்டாா். ஓம்சக்தி பீடம் அருகே பெரிய யாக சாலை அமைக்கப்பட்டு இருந்தது. காலை 11.40 மணிக்கு பெரிய எண்கோண வடிவிலான யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி, வேள்வி பூஜையை அடிகளாா் தொடக்கி வைத்தாா். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தா்கள் அரசு வழிகாட்டுதலின்படி வந்த பக்தா்களுக்கு மட்டும் ஆன்மிக இயக்க நிா்வாகிகள் அனுமதி அளித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூா் மற்றும் புஷ்பவனம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சக்தி பீட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com