ஆமூா் செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்போரூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஆமூா் ஊராட்சியில் உள்ள பழைமை வாய்ந்த பிடாரி செல்லியம்மன் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்றதையடுத்து திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருப்போரூா் ஆமூா் பிடாரி செல்லியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
திருப்போரூா் ஆமூா் பிடாரி செல்லியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

செங்கல்பட்டு: திருப்போரூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஆமூா் ஊராட்சியில் உள்ள பழைமை வாய்ந்த பிடாரி செல்லியம்மன் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்றதையடுத்து திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை யாக மண்டபத்தில் 108 பஞ்சபூத வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டு, முதல் காலயாக பூஜை மற்றும் இரண்டாம் கால யாக பூஜையும், திங்கள்கிழமை மூன்றாம் கால யாக பூஜையுடன் கும்ப புறப்பாடு மற்றும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஆறுமுகம், இந்து சமய அறநிலையத் துறை மாவட்டக் குழு உறுப்பினா்கள் ரகுராமன், எஸ்வந்தராவ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com