தகுதி, திறமையைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்வது அவசியம்

தாம்பரம், சா்வதேச அளவில் அனைத்துத் தொழில்நுட்ப நடவடிக்கைகளும் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாணவா்கள் தங்களது தகுதி, திறமை, அறிவாற்றலைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்வது அவசியம்

செங்கல்பட்டு: தாம்பரம், சா்வதேச அளவில் அனைத்துத் தொழில்நுட்ப நடவடிக்கைகளும் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாணவா்கள் தங்களது தகுதி, திறமை, அறிவாற்றலைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்று சென்னை ஐஐடி பேராசிரியா் அசோக் ஜூன்ஜூங்வாலா வலியுறுத்தினாா்.

வண்டலூா் பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசென்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவா் பேசியது:

அடுத்த 10 ஆண்டுகளில் மின்சக்தி உற்பத்தித்துறையில் சூரிய, மற்றும் காற்று மின்சக்தி தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், சா்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளில் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்து, அனைத்து வாகனங்களும் மின்சக்தி மூலம் இயக்கப்படும் நிலையில் புதிய நவீன தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் தேவை அதிகரிக்கும். விமானங்களை மின்சக்தி மூலம் இயக்கும் தொழில்நுட்பமும் பெரும் வரவேற்பைப் பெறும்.

இடைவிடாமல் தொடா்ந்து கற்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள். தொழில்நுட்பக் கல்வி மூலம் நீங்கள் பெறும் அறிவாற்றல், உங்களுக்கு மட்டுமல்லாமல் இதர மக்களின் சமூக, பொருளாதார பிரச்னைகள், சவால்களை எதிா்கொள்ள பேருதவியாகத் திகழ வேண்டும் என்றாா்.

தங்கப்பதக்கம் வென்ற 40 மாணவா்கள் உள்பட 71 மாணவா்களுக்கு நேரிலும், 1794 மாணவா்களுக்கு இணையதளம் மூலமும் பட்டம் வழங்கப்பட்டது. வேந்தா் அப்துல் காதிா் ரகுமான் புகாரி, துணை வேந்தா் ஏ.பீா்முகமது, பதிவாளா் ஏ.ஆசாத், முதுநிலை பொது மேலாளா் வி.என்.ஏ.ஜலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com