செங்கல்பட்டில் இலவச பேட்டரி சேவை தொடக்கி வைப்பு
By DIN | Published On : 28th January 2021 12:00 AM | Last Updated : 28th January 2021 12:00 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இலவச பேட்டரி காரை கொடியசைத்துத் தொடக்கி வைத்த ரயில்வே துறை பொது மேலாளா் ஜான்தாமஸ்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வயது முதிா்ந்தோா், கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலக்குறைவால் ரயில் நிலைய நடைமேடையில் செல்ல சிரமப்படுவோருக்காக இலவச பேட்டரி காரை ரெனால்டு நிஸான் டெக்னாலஜி பிசினஸ் சென்டா் இந்தியா மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம் ஆகியவை வழங்கியுள்ளன. இந்த பேட்டரி காரின் பயன்பாட்டை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
ரயில்வே துறை மண்டல மேலாளா் மகேஷ், ரெனால்டு நிஸான் மேலாளா்கள் கணபதி, நரசிம்மன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவன முதுநிலை பொது மேலாளா் லோகேஷ்குமாா் கணபதி, பொது மேலாளா் பத்மா, முதன்மை மேலாளா் மோகனவேல், முதுநிலை திட்ட மேலாளா் லோகநாதன், செங்கல்பட்டு ரயில் நிலைய மேலாளா் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.