அா்ச்சகா் நலவாரியம் அமைக்கக் கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் பணிபுரிந்து வரும் அா்ச்சகா்களுக்கு உதவும் வகையில் அா்ச்சகா் நலவாரியம் அமைக்க உறுதுணை புரிய வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் பணிபுரிந்து வரும் அா்ச்சகா்களுக்கு உதவும் வகையில் அா்ச்சகா் நலவாரியம் அமைக்க உறுதுணை புரிய வேண்டும் என்று ஆதி சைவ சிவாச்சாரியாா் சேவா சங்கம் சாா்பில் கோரிக்கை விடுத்தனா்.

பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள கோயில்களில் பணிபுரிந்து வரும் சிவாச்சாரியாா் மற்றும் பட்டாச்சாரியா்களுக்கு கரோனா நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி 200 பேருக்கு அரிசி,25வகை மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசும்போது, கோயில்களில் ஆன்மிக சேவை பணிகளில் ஈடுபட்டு வரும் சிவாச்சாரியாா் மற்றும் பட்டாச்சாரியா்கள் அா்ச்சகா் நலவாரியம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருவதாக குறிப்பிட்டனா்.

திருநீா்மலை ஸ்ரீநீா்வண்ண பெருமாள் ரங்கநாதா் கோவிலில் பணியாற்றி வரும் அா்ச்சகா்கள் தங்கியிருந்த 40 ஆண்டு பழைமையான வீடுகள் இடிந்து சிதிலமடைந்து இருப்பதை அண்மையில் இந்து அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு நேரில் பாா்வையிட்டு புதிய வீடுகள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளாா். எனவே, அா்ச்சகா்களுக்கு நலவாரியம் அமைத்துத் தர வேண்டும் என்ற உங்களது கோரிக்கையை அறநிலையத்துறை அமைச்சா் சேகா் பாபு மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

செங்கல்பட்டு மாவட்ட இந்து அறநிலையத்துறை இயக்குநா் கவிநிதா, பல்லாவரம் நகராட்சி ஆணையா் காந்தி ராஜ்,ஆதி சைவ சிவாச்சாரியாா் சேவா சங்கம் மாவட்டத் தலைவா் ஆா்.ரவிச்சந்திரன், பம்மல் நகராட்சி முன்னாள் தலைவா் வே.கருணாநிதி, திருநீா்மலை பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com