செங்கல்பட்டில் பசுமை இயக்கத்தின் கலந்துரையாடல் 

செங்கல்பட்டில் பசுமை இயக்கத்தின் கலந்துரையாடல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
செங்கல்பட்டில் நடைபெற்ற பசுமை இயக்கத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி.
செங்கல்பட்டில் நடைபெற்ற பசுமை இயக்கத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி.

செங்கல்பட்டில் பசுமை இயக்கத்தின் கலந்துரையாடல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பசுமை இயக்கத்தின் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா செங்கல்பட்டில் இன்று நடைபெற்றது. விழாவில் பசுமை இயக்கத்தின் தலைவர் ஏ.சிவக்குமார் தலைமையில் பொருளாளர் தமிழ் பாரதி, துணைத் தலைவர் வழக்கறிஞர் ரவி, இணைச் செயலாளர் விஜயகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி மதன் மற்றும் அபிலேஷ் ஹஜ் உள்ளிட்ட  பசுமை இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினர்.

பசுமை இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களையும் மரம் நட்டு வளர்க்கும் பசுமைக்காடுகள் உள்ளடங்கிய இயற்கை பாதுகாப்பு திட்டங்களையும், மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்வது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில், சீமைக்கருவேல மரங்களை அகற்றி, மழை தரக்கூடிய மரங்களை நட்டு, இழந்து வரும் இயற்கையை மீட்டேடுக்க நாம் இணைந்து திட்டங்களை இயக்குவோம். 

இதற்காக பசுமை இயக்கம், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 ஆயிரம் தன்னார்வல உறுப்பினர்களை சேர்க்கும் செயல்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அழிந்து வரும் பசுமையை காப்பாற்றுவது. இதன் மூலம் பூமி முழுவதும் ஆக்சிஜன் நிறைந்த உலகத்தை படைப்போம், வேலையில்லாத படித்த பட்டதாரிகளுக்கு பசுமை பாதுகாப்பு படையில் இருக்க இடம், உண்ண உணவு, மற்றும் 3 மாத தாவரவியல் பயிற்சிகள் மற்றும் இந்திய அரசின் சான்றிதழை கொடுத்து நமது பசுமை இயக்கத்தில் வேலை செய்ய விரும்புவோர் ரூபாய் 7500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது.

விவசாயம் செய்ய முடியாத சூழலில் இருக்கின்ற விவசாயிகளிடம் நிலத்தை குத்தகைக்கு பெற்று அழிந்து வரும் விவசாயத்தை மீட்டெடுப்பது. இந்தத் திட்டத்தின்  மாதாந்திர வருமானத்தை பசுமை தெய்வங்களான விவசாயிகளுக் வருமானம் ஈட்டித் தரப் படும் விவசாயிகள் தற்கொலைக்கு முயற்சிக்கின்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. இதுபோன்ற எண்ணற்ற பசுமை திட்டங்கள்பசுமை இயக்கம் எடுத்து செல்ல முற்பட்டு வருவது, ஒருங்கிணைந்த கலந்துரையாடல் நடைபெற்றது. 

பல்வேறு பகுதிகளில் இருந்து பசுமை இயக்க நிர்வாகிகள், செய்யூர் ஏரி நீர் நிலை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்ட விவசாயிகள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பு நிர்வாகி நிறுவனத்தில் பணிபுரிவோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com