செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 12th June 2021 07:48 AM | Last Updated : 12th June 2021 07:48 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், தனித்துணை ஆட்சியா் ஜெயதீபன், தொழிலாளா் துறை துணை ஆய்வாளா் டி.கமலா முன்னிலையில் அனைத்து துறை அரசு பணியாளா்கள் உறுதி மொழியேற்றனா். இதனைத்தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று கையெழுத்திட்டனா்.