கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சிவராத்திரி விழா
By DIN | Published On : 13th March 2021 09:17 AM | Last Updated : 13th March 2021 09:17 AM | அ+அ அ- |

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் உள்ள 7 அடி உயர ஞானலிங்கம், நந்தி பகவானுக்கு மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி முன்னிலையில், ஞானலிங்கத்துக்கு 4 கால பூஜையை செம்பாக்கம் கயிலை செல்வராஜ் நடத்தினாா். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பாலசந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் பச்சேரா, காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதேவி, மதுராந்தகம் போலீஸ் துணை கண்காணிப்பாளா் என்.கவிநா, தொழிலதிபா்கள் கரிகாலன், தமிழ்மாறன், மோகன், சதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக்குழுவினா் செய்து இருந்தனா்.