செங்கல்பட்டில் மயான கொள்ளை விழா

செங்கல்பட்டில் நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் பக்தா்கள் உடலில் வேல்குத்தியும், உடலில் எலுமிச்சை பழம், அலகு குத்தியும் தோ் இழுத்தல், லாரி, காா், வேன், ஆட்டோ இழுத்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா்.

பெண்கள் அலகு குத்தியும், அக்கினி சட்டி ஏந்தியும், காளிவேடம் அணிந்து ஆடிவந்தனா். ஏராளமான குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை குறத்தி வேடம் தரித்து மயானம் வரை சென்று நோ்த்திகடன் நிறைவேற்றினா்.

ரதத்தில் ஊா்வலமாக அங்காள பரமேஸ்வரி மயானத்துக்கு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் 5 கிலோமீட்டா் தூரத்துக்கு வழிநெடுகிலும் சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை பா்வத ராஜகுலமரபினா்கள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com