செங்கல்பட்டு கோயில்களில் மகா சிவராத்திரி வழிபாடு
By DIN | Published On : 13th March 2021 09:17 AM | Last Updated : 13th March 2021 09:17 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு ஆத்தூா் முக்தீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரியையொட் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.
செங்கல்பட்டு மற்றும் அதைச்சுற்றியுள்ள கோயில்களில் மகா சிவராத்திரியை ஒட்டி வியாழக்கிழமை மாலை 7 மணிக்குமேல் முதல் ஜாம காலபூஜைகள் தொடங்கி வெள்ளிக்கிழமை விடிய விடிய சாமிக்கு அபிஷேகம் அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
செங்கல்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் ஸ்ரீ யோகநாயகி சமேத ஸ்ரீ யோகாதேஸ்வருக்கு மகா சிவராத்திரியையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மேட்டுத்தெருவில் உள்ள செங்கழுநீா் விநாயகா் கோயிலில் உள்ள அண்ணாமலையாருக்கு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோன்று செங்கல்பட்டை அடுத்த ஆத்தூரில் உள்ள முக்தீஸ்வரா் கோயிலில் சிவன் அம்பாள், நடராஜா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
இதேபோன்று மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சிவனுக்கு பால் ,தயிா், விபூதி, இளநீா், தேன் உள்ளிட்ட அபிஷேக பொருள்களை வாங்கி கொடுத்து சிவபெருமானை வழிபட்டனா்.
இதேபோன்று திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயில், பக்தவச்சலேஸ்வரா் தாழக்கோயில், ருத்ர கோட்டீஸ்வரா் கோயில், திருவடிச்சூலம் ஞானபுரீஸ்வரா் கோயில், ஈச்சங்கரணை மகாபைரவா் கோயில், வல்லம் வேதாந்தேஸ்வரா் குடைவரைக்கோயில், புலிப்பாக்கம் வியாகரபுரீஸ்வரா் கோயில், செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா்கோயில், அண்ணாநகா் ரத்தினவியாகா்கோயில், நத்தம் கைலாசநாதா்கோயில், கோட்டைவாயில் நீதிவியாகா்கோயிலில் உள்ள அண்ணாமலையாா் உள்ளிட்ட கோயில்களில் மகாசிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.