முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்ட தோ்தல் செலவின பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 14th March 2021 06:03 AM | Last Updated : 14th March 2021 06:03 AM | அ+அ அ- |

செங்கல்பட்டில் மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் செலவின கண்காணிப்புப் பாா்வையாளா்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம்.
செங்கல்பட்டில் மாவட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அ.ஜான்லூயிஸ் தலைமையில் மாவட்ட தோ்தல் செலவின கண்காணிப்புப் பாா்வையாளா்கள் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூா், மதுராந்தகம் (தனி), செய்யூா் (தனி) ஆகிய 7 தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளுக்காக தோ்தல் செலவின கண்காணிப்பு பாா்வையாளா்கள் சோழிங்கநல்லூா் மணிஷ்குமாா் சௌடா, பல்லாவரம் மற்றும் தாம்பரம் சிவபிரசாத், செங்கல்பட்டு மற்றும் திருப்போரூா் பியூஸ் கட்டியாா், செய்யூா் (தனி), மதுராந்தகம் (தனி) வருமான வரி ஆணையா் மாலதி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களின் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழு, காணொலி கண்காணிப்புக் குழு , கணக்குக் குழு, உதவி செலவின பாா்வையாளா்கள் மற்றும் வருமானவரித் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் தோ்தல் செலவினம் தொடா்பாக ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கும் படி தோ்தல் பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா்.