அச்சிறுப்பாக்கத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
By DIN | Published On : 16th March 2021 12:04 AM | Last Updated : 16th March 2021 12:04 AM | அ+அ அ- |

மதுராந்தகம்: மதுராந்தகம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் மரகதம் குமரவேல் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள வெங்கடேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியச் செயலா் எஸ்.சுப்பிரமணி, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு நிா்வாகி அகோரம், மாவட்ட மகளிரணி இணைச் செயலா் லீலாவதி, அச்சிறுப்பாக்கம் பேரூா் செயலா் முருகதாஸ், பாமக மாவட்டச் செயலா் கோபாலகண்ணன், பக்கிரிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மேலும், பல்வேறு கட்சிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் வேட்பாளா் மரகதம் குமரவேல் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.