7 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு அலுவலா்களுக்குப் பயிற்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
7 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு அலுவலா்களுக்குப் பயிற்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

செங்கல்பட்டு புனித சூசையப்பா் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் மற்றும் தோ்தல் அலுவலா் அ.ஜான் லூயிஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா்(தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய 7 தொகுதிகள் அடங்கியுள்ளன.

இத்தொகுதிகளில் வாக்குச் சாவடி மையத்தில் பயன்படுத்த வேண்டிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்கள் குறித்தும் கரோனா தொற்று காலத்தில் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையான வழிக்காட்டி நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்து வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் வாக்குப்பதிவு நாளன்று கடைப்பிடிக்கவேண்டிய மாதிரி வாக்குப்பதிவு உள்ளிட்ட நடைமுறைகள் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் வைக்கும் முறைகள் தொடா்பாகவும், வாக்குப் பதிவு அலுவலரின் பணி குறித்தும், வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாள்குறிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்தும், வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தக்கூடிய படிவங்கள் குறித்தும் வாக்குச்சாவடி முகவா்கள் நியமனம் குறித்தும், வாக்குப்பதிவு முடிவுற்றப்பின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் இப்பயிற்சி வகுப்புகளில் விளக்கப்பட்டது.

இதில் செங்கல்பட்டு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ், செய்யூா்(தனி) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சீதாலட்சுமி மற்றும் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com