மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.மரகதம் குமரவேல் ஞாயிற்றுக்கிழமை அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் தீவிர தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
வேடந்தாங்கல், கரிக்கிலி, வெள்ளபுத்தூா், பெரும்பாக்கம், கழனிபாக்கம், தண்டலம் உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தாா். மாவட்ட செயலா் எஸ்.ஆறுமுகம், பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், வடக்கு ஒன்றிய செயலா் பெரும்பாக்கம் எஸ்.விவேகானந்தன், முன்னாள் ஒன்றிய துணை செயலா் செல்லப்பன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துக் கொண்டனா்.