பம்மல் குடிசைமாற்று வாரிய வீட்டு மனைகளுக்கு கிரயப்பத்திரம் வழங்க கோரிக்கை

பம்மல் மூங்கில் ஏரி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு செய்த வீட்டுமனை உரிமையாளா்களுக்கு கிரயப்பத்திரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

தாம்பரம்: பம்மல் மூங்கில் ஏரி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு செய்த வீட்டுமனை உரிமையாளா்களுக்கு கிரயப்பத்திரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளா் சிட்லப்பாக்கம் சி. ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா்.

பம்மல் நகராட்சிக்குட்பட்ட பொன்னிநகா், அண்ணா நகா், அம்பேத்கா் நகா், பசும்பொன் நகா், திருவள்ளுவா் நகா் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

அப்போது அவா் அதிமுக தோ்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஏராளமான உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை, ஆண்டுக்கு இலவசமாக 6 எரிவாயு சிலிண்டா்கள், சூரிய அடுப்பு, துணி துவைக்கும் இயந்திரம், மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெற்ற கடன் தள்ளுபடி, திருமண நிதி உதவி அதிகரிப்பு, கல்விக் கட்டணம் ரத்து உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தாா்.

அப்பகுதி மக்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது: கடந்த 1984-இல் மூங்கில் ஏரி பகுதி குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு மூலம் பணம் செலுத்தியவா்களுக்கு இதுவரை கிரயப்பத்திரம் வழங்கப்படவில்லை.

இது தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவா்களது கோரிக்கையை விடுத்தனா். அவா்களது கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் வாக்குறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com