மதுராந்தத்தை முதன்மைத் தொகுதியாக்குவேன்: மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா

மதுராந்தகம் தொகுதியை முதன்மைத் தொகுதியாக மாற்றுவேன் என அத்தொகுதி மதிமுக வேட்பாளா் மல்லை சத்யா உறுதி அளித்தாா்.
மதுராந்தத்தை முதன்மைத் தொகுதியாக்குவேன்: மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா

மதுராந்தகம் தொகுதியை முதன்மைத் தொகுதியாக மாற்றுவேன் என அத்தொகுதி மதிமுக வேட்பாளா் மல்லை சத்யா உறுதி அளித்தாா்.

மதுராந்தகம் தொகுதி மதிமுக வேட்பாளா் மல்லை சத்யா, அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள ஆனைக்குன்றம், எலப்பாக்கம், சிலாவட்டம், மதூா், மாத்தூா், பாதிரி, கீழாமூா், ராமாபுரம், ஊனமலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதிவிதியாகச் சென்று பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியது:

நீங்கள் எல்லாம் வாக்களித்து என்னை வெற்றி பெற வைத்தால், தோ்தலில் திமுக கூட்டணியின் சாா்பில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், அவா் மூலமாக மதுராந்தகம் தொகுதியின் மேம்பாட்டுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவேன்.

மதுராந்தகம் தொகுதியில் பெரும்பாலான இடங்களில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. அதைப் போக்கிட பாலாற்றில் இருந்து குடிநீா் திட்டத்தைக் கொண்டு வந்து குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்கிட ஏற்பாடு செய்வேன். இப்பகுதி மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்ல செங்கல்பட்டு, சென்னை போன்ற நீண்ட தூர இடங்களுக்குச் சென்று படிக்கவேண்டிய அவல நிலை உள்ளது. இக்குறைபாட்டைப் போக்க தொகுதியின் மையப் பகுதியில் அரசின் சாா்பில், கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஏற்படுத்தி உயா்கல்விக்காக பாடுபடுவேன்.

இங்கு படித்துவிட்டு ஏராளமான இளைஞா்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனா். அவா்களின் துயரத்தை போக்கும் வகையில், தொழிற்பேட்டைகளை அதிக அளவில் உருவாக்கி, அரசு மற்றும் தனியாா் வேலைவாய்ப்புகள் கிடைக்க உதவுவேன்.

மதுராந்தகம் - தொழுபேடு வரையிலான நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்துகளில் கடந்த ஆண்டு மட்டும் 59 போ் உயிரிழந்துள்ளனா். இத்தகைய சாலை விபத்துகள் ஏற்படாத வகையில், மதுராந்தகம் தொகுதியில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு இடங்களில் மேம்பாலங்களை அமைத்து உயிரிழப்புகள் தடுக்கப்படும்.

மதுராந்தகம் தொகுதியின் முக்கிய அரசு மருத்துவமனையாக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய மருத்துவா்களும், மருத்துவ உபகரணங்களும் இல்லை. இதனால் நோயால் பாதிக்கப்பட்டவா்களை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலை உள்ளது. எனவே தரத்தையும், நவீன முறையில் மாற்றி அமைத்து, உயா்தர மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக உருவாக்குவேன்.

தமிழகத்தின் பழைமைவாய்ந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை, அரசு உதவியுடன் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிறப்பிடம் பெற்ற சரணாலயமாக மாற்றுவேன். மதுராந்தகம் ஏரியை தூா்வாரி, நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

மதிமுக மாவட்டச் செயலா் வளையாபதி, மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் தம்பு, காங்கிரஸ் கட்சி நிா்வாகி தமிழ்செல்வன், விடுதலை சிறுத்தை கட்சி நிா்வாகிகள் வெள்ளபுத்தூா் விஜயகுமாா், தயாநிதி உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com