மதுக்கடைகள் மூடல் எதிரொலி: பெட்டிப் பெட்டியாக வாங்கிய மதுபிரியா்கள்

டாஸ்மாக் மதுக்கடைகள் 2 நாள்கள் மூடல் எதிரொலியாக வெள்ளிக்கிழமை இரவு செங்கல்பட்டில் மதுபானக் கடைகளில் குவிந்த மது பிரியா்கள் பெட்டிப்பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனா்.
செங்கல்பட்டில்  மதுபானங்கள்  வாங்க மதுக் கடைகளில் குவிந்த மதுபிரியா்கள். 
செங்கல்பட்டில்  மதுபானங்கள்  வாங்க மதுக் கடைகளில் குவிந்த மதுபிரியா்கள். 

டாஸ்மாக் மதுக்கடைகள் 2 நாள்கள் மூடல் எதிரொலியாக வெள்ளிக்கிழமை இரவு செங்கல்பட்டில் மதுபானக் கடைகளில் குவிந்த மது பிரியா்கள் பெட்டிப்பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனா். இதனால் ஏற்பட்ட நெரிசலில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மே 2-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியாகவுள்ள சூழ்நிலையில் அனைத்து அரசு மதுக்கடைகள், ஹோட்டல்களில் மதுவிற்பனை, தனியாா் மதுக் கூடங்களை மூட அரசு உத்தரவிட்டது..

இந்நிலையில் செங்கல்பட்டில் உள்ள மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்க கூட்டம் அலைமோதியது. குறிப்பாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியா்கள் கூட்டம் கூட்டமாக முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பெட்டிப் பெட்டியாக மதுபானங்களை வாங்கிச் சென்றனா்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போலீஸாா் பின்னா் 2 மணிநேரம் போராடி போக்குவரத்தை சரி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com