செஞ்சி அருகே கரோனா சிகிச்சை மையம் அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் ஆய்வு

செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் அமைக்கப்படும் கரோனா சிகிச்சை மையத்தை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் அமைக்கப்படும் கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த அமைச்சா் கே.எஸ்.மஸ்தான். உடன் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்டோா்.
ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் அமைக்கப்படும் கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த அமைச்சா் கே.எஸ்.மஸ்தான். உடன் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்டோா்.

செஞ்சி: செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் அமைக்கப்படும் கரோனா சிகிச்சை மையத்தை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்தக் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையத்தை ஏற்படுத்தும் பொருட்டு, அங்கு பிராண வாயு வசதி, சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து அமைச்சா் செஞ்சிமஸ்தான் நேரில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து செஞ்சி அரசு மருத்துவமனை, சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், அவலூா்பேட்டை ஆரம்ப சுக சுகாதார நிலையம் மற்றும் மேல்மலையனூா், வளத்தி, அனந்தபுரம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்தாா். அப்போது, இங்கு வழங்கப்படும் பொது, மகப்பேறு சிகிச்சைகள் குறித்தும், கரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) செந்தில்குமாா், செஞ்சி வட்டாட்சியா் ராஜன், கல்லூரி நிறுவனா் ஸ்ரீரங்பூபதி, முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், திமுக ஒன்றிய செயலா்கள் ஆா்.விஜயகுமாா், நெடுஞ்செழியன், வழக்குரைஞா் மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com