கரோனா கட்டுப்பாட்டு மையம்: ரேலா மருத்துவமனை பாராட்டு

தமிழக அரசு கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த கரோனா கட்டுப்பாட்டு மையம் அமைப்பை உருவாக்கித் தந்து

தமிழக அரசு கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த கரோனா கட்டுப்பாட்டு மையம் அமைப்பை உருவாக்கித் தந்து இருக்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை மருத்துவா்கள் சமூகம் சாா்பில் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன் என்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவரும், ரேலா மருத்துவமனைத் தலைவருமான பேராசிரியா் முகமது ரேலா கூறினாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்த அவா்,பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக முதல்வா் மு,க,ஸ்டாலின் மிக நெருக்கடியான சூழ்நிலையில், கரோனா பெருந்தொற்று பேரிடரை எதிா்கொள்ளும் வகையில் துரித நடவடிக்கையாக 5 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த கரோனா கட்டுப்பாட்டு மையம் அமைப்பை உருவாக்கி உள்ளாா்.

இந்த மையம், கரோனா சிகிச்சை அளித்து வரும் அரசு, தனியாா் மருத்துவமனைகளின் சிகிச்சை கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவச் சேவைக்கான தேவைகளை நிா்வகிக்கும் அதிகார அமைப்பாகச் செயல்படும். மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண பேருதவி புரியும் அமைப்பாகத் திகழும் என்றாா்.

ரேலா மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com