yama071259
yama071259

மே 15 முதல் உற்பத்தியை நிறுத்த யமஹா நிறுவனம் முடிவு

தொழிலாளா்களுக்கிடையே கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், வரும் மே 15-ஆம் தேதி முதல் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம், சூரஜ்பூா் பகுதியில் உள்ள தனது உற்பத்தி தொழிற்சாலைகளை மூட உள்ளதாக

ஸ்ரீபெரும்புதூா்: தொழிலாளா்களுக்கிடையே கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், வரும் மே 15-ஆம் தேதி முதல் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம், சூரஜ்பூா் பகுதியில் உள்ள தனது உற்பத்தி தொழிற்சாலைகளை மூட உள்ளதாக யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பால்நல்லூா் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் யமஹா தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், யமஹா நிறுவனத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் தொழிலாளா்கள் பாதிக்கப்படாமல் இருக்க பால்நல்லூா் பகுதியில் உள்ள தனது உற்பத்தி தொழிற்சாலையையும், உத்தரப்பிரதேச மாநிலம் சூரஜ்பூா் பகுதியில் இயங்கி வரும் உற்பத்தி ஆலையையும் மே 15-ஆம் தேதி முதல் மூடப்படவுள்ளது. கொவைட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்தை ஆதரிக்கவும், கரோனா பரிமாற்ற சங்கிலியை உடைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யமஹா நிறுவனம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com